சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
துல்கர் சல்மான், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் 'நடிகையர் திலகம்'. நடிகை சாவித்திரியின் வாழக்கை வரலாறை மையமாக வைத்து தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் மே -11 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
'நடிகையர் திலகம்' படத்தில் சாவித்திரியாக நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், 120-க்கும் மேற்பட்ட காஸ்ட்யூம்ஸ் அணிந்து நடித்திருக்கிறாராம். கருப்பு- வெள்ளை படக்காலத்தில் நடக்கும் காட்சிகளுக்காக கீர்த்தி சுரேஷுக்கு பிரத்தியேகமான மேக் அப்பை போட்டுள்ளனர்.
நடிகையர் திலகம் படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷை அணுகியபோது, தென்னிந்திய சினிமாவில் ஒரு லெஜண்டாக வாழ்ந்த சாவித்திரியாக நம்மால் நடிக்க முடியுமா என்ற சந்தேகத்தில் முதலில் நடிக்க மறுத்தாராம்.
இயக்குநர் நாக் அஷ்வின் படத்தின் முழு ஸ்கிரிப்ட்டையும் விளக்கி சொன்ன பிறகே நம்மால் நடிக்க முடியும் என்ற நம்பிக்கை கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்டதாம்.
அதுமட்டுமல்ல, கீர்த்தி சுரேஷ் இதுவரையில் எந்தப் படத்தின் கதையையும் மூன்று மணிநேரம் கேட்டது கிடையாது. முதன் முதலாக நடிகையர் திலகம் படத்தின் கதையைத்தான் மூன்று மணிநேரம் கேட்டாராம்.
உண்மையாக சொல்கிறாரா? அல்லது புரமோஷனுக்கு சொல்கிறாரா?