தனுஷ் 56... தமிழரசன் பச்சமுத்து : அப்போ மாரி செல்வராஜ்? | தாய் கிழவி : சிங்கம் புலி நடிப்பை பாராட்டிய கமல் | தெலுங்கு, தமிழ் கலாசாரத்துடன் இணைந்திருக்கிறேன்! ஜான்வி கபூர் | போர் முழக்கம் : வடிவேலுவின் புதிய படம் | கமல் - ரஜினி இணையும் படம் குறித்து அனிருத் வெளியிட்ட அப்டேட்! | விஜய் சேதுபதியை இயக்கும் அஜித் பட இயக்குனர்! | போர் சூழல் : டாக்சிக் ரிலீஸ் ஜூன் 4ம் தேதிக்கு தள்ளி வைப்பு | ‛காற்றின் மொழி' இசையில்.... : ‛மெலோடி கிங்' வித்யாசாகர் பாடல்களை மறக்க முடியுமா? | பிளாஷ்பேக்: ராஜாஜி பாராட்டிய சிவாஜிகணேசன் | சிகரெட், மதுவை தொட்டதில்லை: சதீஷ் பெருமிதம் |

45 நாள் சினிமா வேலை நிறுத்தத்திற்கு பிறகு வெளியான முதல் படம் மெர்க்குரி. ஹாலிவுட் பாணியில் உருவாகியிருக்கும் சைலண்ட் த்ரில்லர் படமான மெர்க்குரியை ரஜினி தனது வீட்டு தியேட்டரில் பார்த்தார். பின்னர் அவர் மெர்க்குரி கலைஞர்களை சந்தித்து பாராட்டு தெரிவிக்க விரும்பினார்.
இதன் அடிப்படையில் நேற்று மெர்க்குரி டீம் ரஜினியை சந்தித்தனர். இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கார்த்திக் சுப்பராஜ், நடிகர்கள் சனான்ந்த் ரெட்டி, தீபக் பரமேஷ், ஷன்ஷக் புருஷோத்தமன், அனிஷ் பத்மநாபன், நடிகை இந்துஜா, இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளர் திரு. ஆகியோர் ரஜினியை சந்தித்தார்.
அவர்களிடம் ரஜினி படத்தில் வரும் காட்சிகளை தனித்தனியாக சொல்லி வியந்து பாராட்டினார். குறிப்பாக பிரபுதேவா, இந்துஜா நடிப்பையும், பின்னணி இசையையும் வெகுவாக பாராட்டினார்.
பிரபுதேவா ஹிந்திப் பட பணிகள் காரணமாக மும்பையில் இருப்பதால் அவர் இதில் கலந்து கொள்ளவில்லை. ரஜினியின் அடுத்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.




