Advertisement

சிறப்புச்செய்திகள்

பிளாஷ்பேக்: அவ்வையாக நடித்த ஆண் நடிகர் | 'தாய் கிழவி' துவங்கும் முன்பே, அடுத்த படத்திற்கும் இயக்குனரை முடிவு செய்த சிவகார்த்திகேயன் | 'ஜனநாயகன்' வினியோகஸ்தர்களுக்கு 'டாக்சிக்' மூலம் 'டானிக்' தரும் தயாரிப்பாளர் | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா 'மெஹந்தி' நிறைவு | நானி இரட்டை வேடத்தில் நடிக்கும் படத்திற்கு 'பிளடி ரோமியோ' என டைட்டில் | வாரணாசி : ஜார்ஜியாவில் அடுத்த கட்டப் படப்பிடிப்பு | ராஜமவுலி, மகேஷ்பாபு சண்டை ; ராம் கோபால் வர்மா பகிர்ந்த வைரல் வீடியோ | கேரளா ஸ்டோரி 2 வெளியீடு குறித்து வழக்கு, அடுத்தக்கட்ட நகர்வு என்ன | நிலச்சரிவில் கால் இழந்த பெண்ணுக்கு செயற்கைக்கால் மற்றும் சொந்த வீடு ; மம்முட்டி உதவி | 'கராத்தே பாபு'வில் ரவி மோகனுடன் மோதும் சக்தி வாசுதேவன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

5 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன்: நிவேதா பெத்துராஜ்

16 ஏப், 2018 - 12:20 IST
எழுத்தின் அளவு:
Nivetha-Pethuraj-talks-about-sexual-abuse
Advertisement

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. திரைத்துறையை சார்ந்தவர்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ பதிவொன்றை நடிகை நிவேதா பெத்துராஜ் வெளியிட்டுள்ளார். அதில், தனக்கு 5 வயதில் பாலியல் தொல்லை நடந்ததாக குறிப்பிட்டிருக்கிறார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:

நாட்டில் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. அதில் ஒரு சில பிரச்சனைகளை நம்மால் கட்டுப்படுத்த முடியும். அதில் ஒன்று தான் பெண்கள் பாதுகாப்பு. ஆண்களும், பெண்களும், சிறுவயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பார்கள். நானும் சிறு வயதில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டேன். 5 வயதில் நடக்கும் ஒன்றை நான் எப்படி அம்மா, அப்பாவிடம் எடுத்து சொல்லுவேன். அப்போது என்ன நடந்தது கூட எனக்கு தெரியாது.

பாலியல் தொல்லைகள் வெளியாட்கள் மூலம் நடப்பதில்லை. நமக்கு தெரிந்த உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் மூலமாகத்தான் நடக்கிறது. எனவே எல்லா பெற்றோர்களும் தயவு செய்து பொறுப்புடன் இருங்கள். உங்கள் குழந்தைகளுக்கு யார் எப்படி பேசினால் தப்பு?, எப்படி தொட்டால் தப்பு? என்று 2 வயதில் இருந்தே பேச ஆரம்பியுங்கள். குழந்தைகளுக்கு பள்ளியில் என்ன நடக்கிறது. டியூசனில் என்ன நடக்கிறது என்று நமக்கு தெரியாது. எனவே பாதுகாப்பு குறித்து அதிகம் சொல்லிக் கொடுங்கள்.

நாம் போலீசை நம்பியே இருக்க முடியாது. அந்தப் பகுதியில் இருக்கும் இளைஞர்கள் குழுவாக இணைந்து உங்கள் தெருவில் என்ன நடக்கிறது என்பதை கவனியுங்கள். தவறு நடந்தால் தட்டி கேளுங்கள். தற்போது எனக்கு வெளியே சென்றாலே பயமாக இருக்கிறது. யாரை பார்த்தாலும் சந்தேகத்துடன் பார்க்க தோன்றுகிறது. பாலியல் துன்புறுத்தல் மிக தவறானது. இதனை அழித்தால் நாம் ஒரு அமைதியான இடத்தில் வாழலாம்.

இவ்வாறு அந்த வீடியோவில் பேசியிருக்கிறார் நிவேதா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap