நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

தமிழ்த் திரையுலகத்தில் கடந்த மார்ச் 1ம் தேதி முதல் புதிய படங்களை வெளியிடாமல் நிறுத்தி வைத்துள்ளார்கள். இந்த வேலை நிறுத்தப் போராட்டம் எப்போது முடிவடையும் என்பது பற்றி திரையுலகத்தில் உள்ள பலருக்கு தெரியாமல் இருக்கிறது.
ஒரு பக்கம் தயாரிப்பாளர் சங்கம் புதுப் புது ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுக் கொண்டிருந்தாலும் மற்றொரு பக்கம் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர முயற்சிகள் எடுப்பதாகச் சொல்கிறார். நேற்று கூட சங்கத் தலைவர் விஷால் அமைச்சரை சந்தித்துப் பேசியுள்ளார். ஆனால், அது பற்றிய விவரங்களை வெளியிடவில்லை.
இதனிடையே, மௌனப் படமாக எடுக்கப்பட்டுள்ள 'மெர்க்குரி' படம் நாளை தமிழ்நாட்டைத் தவிர மற்ற மாநிலங்களில், வெளிநாடுகளில் வெளியாகிறது. இந்தப் படத்தை முதலில் தமிழ்நாட்டிலும் வெளியிடப் போவவதாக படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அறிவித்திருந்தார். ஆனால், அதற்கு மற்ற தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த முடிவிலிருந்து பின்வாங்கினார். நாளை இப்படத்தை மற்ற இடங்களில் வெளியிடுகிறார்.
இது மௌனப் படம் என்பதால் படத்தை வேறு மாநிலங்களில் வெளியிட்டாலும் தமிழ்நாட்டில் வெளியிட வரும் போது வரவேற்பைப் பெறுவது கடினம். அதற்குள் படத்தின் பைரசி வெளிவந்துவிட்டால், தமிழ்நாட்டு வியாபாரமும் பாதிக்கும், வசூலும் பாதிக்கும்.