செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
'ஈட்டி' படத்தை அடுத்து ரவி அரசு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், மஹிமா நம்பியார் நடிப்பில் உருவாகி வரும் படம் - 'ஐங்கரன்'. ஒரே ஒரு பாடல் காட்சியைத் தவிர மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது.
திரைப்படத்துறையினரின் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக தற்போது ஐங்கரன் பட பணிகள் முடங்கியுள்ளன. வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்ததும் அந்தப்பாடல் காட்சியை கோவாவில் படமாக்க படக்குழு புறப்படுகிறது. ஜி.வி.பிரகாஷ், மஹிமா நடிப்பில் எடுக்கப்படவிருக்கும் பாடல் அது.
காதல், ஆக்ஷன் பின்னணியில் தயாராகியுள்ள இந்தப்படத்தில் முக்கியமான சமூகப்பிரச்சனை பற்றியும் பேசி இருக்கிறார் இயக்குநர் ரவிஅரசு. 'ஈட்டி' படத்தில் ஹீரோ அதர்வாவை விளையாட்டு வீரராக வைத்தார்.
ஐங்கரன்' படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஒரு மெக்கானிக்கல் என்ஜினியரிங் கல்லூரி மாணவனாக நடிக்க வைத்திருக்கிறார். இந்தப் படத்தின் மேக்கிங் ஸ்டைலில் பல புதிய விஷயங்களை புகுத்தியிருக்கிறாராம் ரவி அரசு.