ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் சமஸ்கிருதி ஷெனாய். பாரம்பரிய நடன கலைஞர் மற்றும் மாடல் அழகி, மை பேன் ராமு என்ற மலையாளப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தமிழில் வெளிவந்த வழக்கு எண் படத்தின் மலையாள ரீமேக்கான பிளாக் பட்டர்பிளை படத்தில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றார். அதன் பிறகு பல மலையாளப் படங்களில் நடித்தார். தமிழில் காடு படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு சேதுபூமி, வில் அம்பு படங்களில் நடித்தார். தண்ணி வண்டி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சமஸ்கிருதிக்கும், கேரள தொழில் அதிபர் விஷ்ணு எஸ்.நாயருக்கும் கேரளாவில் திருமணம் நடந்தது. இது பெற்றவர்கள் பார்த்து நடத்தி வைத்த திருமணம். திருமணத்திற்கு பிறகு சமஸ்கிருதி நடிப்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறார். நடன நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்க முடிவு செய்திருக்கிறார். அதோடு கணவருடன் இணைந்து ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தையும் நடத்த முடிவு செய்திருக்கிறார்.