சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
விஷால் தற்போது 'இரும்புத் திரை' படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது நடந்து வரும் ஸ்டிரைக் முடிந்த்தும் இப்படம் வெளியாகும். இந்தப் படத்திற்கடுத்து விஷால், 'சண்டக் கோழி 2' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு நடந்து முடிந்துவிட்டது. இந்தப் படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பும் ஸ்டிரைக் முடிந்த்தும் ஆரம்பமாகும்.
'சண்டக் கோழி 2' படத்திற்குப் பிறகு விஷால் தெலுங்கில் வெளிவந்து சூப்பர்ஹிட்டாக ஓடிய 'டெம்பர்' படத்தின் ரீமேக்கில் நடிக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளரான வெங்கட் மோகன் இப்படத்தை இயக்க உள்ளாராம். இப்படத்தில் விஷால் ஜோடியாக நடிக்க ராஷி கண்ணாவிடம் பேசி வருவதாகத் தகவல்.
ராஷி கண்ணா, அதர்வா நடிக்கும் 'இமைக்கா நொடிகள்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. அந்தப் படத்தைத் தவிர 'அடங்க மறு, சைத்தான் கா பச்சா' படங்களிலும் நாயகியாக நடித்து வருகிறார்.
2015ல் வெளிவந்த 'டெம்பர்' படம் ஹிந்தியிலும் ரீமேக்காக உள்ளது. அதில் ரன்வீர் சிங், சாரா கான் நடிக்க உள்ளார்கள். கரண் ஜோஹர் தயாரிக்கிறார்.