ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

பிரபுசாலமன் இயக்கிய 'கும்கி' படத்தில் பாரஸ்ட் ரேஞ்சராக நடித்தவர் தான் மலையாள நடிகர் ஸ்ரீஜித் ரவி. அதன்பின் 'எட்டுத்திக்கும் மதயானை' மற்றும் விஷாலின் 'கதகளி' ஆகிய படங்களில் வில்லனாக நடித்த இவர், புகழ்பெற்ற மலையாள நடிகர் டி.ஜி.ரவியின் மகன் ஆவார்..
தற்போதைய சீசனில் மலையாள நடிகர்களுக்கு தமிழ்ப்படங்களில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். அந்தவகையில் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் சசிகுமாரின் 'அசுரவதம்' படத்தில் போலீஸ் அதிகாரியாக முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார் ஸ்ரீஜித் ரவி..
வில்லனுக்கு பக்கபலமாக படம் முழுதும் வரும் கேரக்டரில் நடித்துள்ள ஸ்ரீஜித் ரவி, இந்தப்படத்தை தொடர்ந்து தமிழில் நிறைய வாய்ப்புகள் வரும் என எதிர்பார்க்கிறாரம்.




