அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் | தனுஷ் மருமகன் நடிக்கும் அடுத்த படம்: தாத்தா கஸ்தூரிராஜா தொடங்கி வைத்தார் | சித்திரம் பேசுதடி ஹீரோயினுக்கு சாருனு பெயர் வைத்தது ஏன்? மிஷ்கின் | மீண்டும் துப்பாக்கி பயிற்சியில் இறங்கிய அஜித் | ஆபாச படத்தைக் காட்டி 2 கோடி கேட்டு மிரட்டிய நடிகை | அதிக சம்பளமா? அதிர்ச்சியான மமிதா பைஜூ | நடிகை ஆன பெண் இயக்குனர் | தியேட்டர் வசூலில் வெளிப்படை தன்மை : நடப்பு தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கோரிக்கை | 'ஜெயிலர் 2' படத்தில் வித்யாபாலன்? | சிரஞ்சீவியின் தெலுங்குப் படத்தில் நடிக்கும் கார்த்தி? |

மாறுப்பட்ட கதாபாத்திரங்களிலும், வித்தியாசமான வேங்களிலும் நடிக்க வேண்டும் என சில நடிகைகள் தான் விரும்புகின்றனர். அந்தவகையில் நடிகை ஆண்ட்ரியா எப்போதுமே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பார். கடந்தாண்டு ராம் இயக்கத்தில், தரமணி படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டை பெற்றது.
இந்நிலையில் சமீபத்தில் மகளிர் தினம் தொடர்பாக சென்னையில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் ஆண்டரியா. அப்போது அவர் பேசும்போது, சினிமாவில் பெண்களுக்கு இன்னும் முன்னுரிமை அளிக்கப்படவில்லை. ஆணாதிக்கம் நிறைந்ததாகவே காணப்படுகிறது. ஒரு நடிகையின் திறமை அவர் எந்த ஹீரோவுடன் நடிக்கிறார் என்பதை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது.
தரமணி படத்திற்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தன. ஆனால் அதன்பின்னர் ஒரு பட வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. கவர்ச்சியாக ஆடை அணிந்து நடிப்பதால் மட்டும் மகிழ்ச்சி அடைந்து விடுவேன் என எதிர்பார்க்காதீர்கள். ஒருபோதும் எனக்கு அது மகிழ்ச்சியை தராது.
திரையில் நான் நிர்வாணமாக கூட நடிக்க தயார். ஆனால் கதையில் அந்த காட்சி மிகவும் அவசியமானதாக இருக்க வேண்டும்.