மகன் விஷயத்தில் விஜய் ஒதுங்கி இருக்க இதுதான் காரணமா ? | 'கும்கி 2' தாமதம் ஏன்?: பிரபு சாலமன் விளக்கம் | தனுஷ் மருமகன் பவிஷ் நடிக்கும் ‛லவ் ஓ லவ்' | காமராஜாரை இழிவுபடுத்துகிறது: 'தேசிய தலைவர்' படத்திற்கு தடைகேட்டு வழக்கு | உருவக்கேலி வலிகளை ஏற்படுத்தும்: பிரீத்தி அஸ்ரானி | பிளாஷ்பேக்: பிரபுவை இயக்கிய சிவாஜி | பிளாஷ்பேக்: சமூக கதையாக மாற்றப்பட்ட இதிகாச கதை | மந்தாகினியாக பிரியங்கா சோப்ரா : முதல் பார்வை போஸ்டர் வெளியீடு | ஸ்லிம்மாக இருக்க ஊசியா : தமன்னா பதில் | நலமாக இருக்கிறேன் : மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கோவிந்தா |

பாலிவுட்டின் பிரபலமான நடிகையாக இருக்கும் சன்னி லியோன், தமிழில் வீரமாதேவி என்ற சரித்திர படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது.
சன்னி லியோன், நிஷா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் தனக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதை மகிழ்ச்சியுடன் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
அதில், இது கடவுளின் திட்டம். குறுகிய காலத்தில் 3 குழந்தைகளுடன் குடும்பத்தை உருவாக்க திட்டமிட்டோம். ஆஷர் சிங், கோவா சிங், நிஷா கவுருடன் எங்கள் குடும்பம் முழுமை அடைந்திருக்கிறது. சில வாரங்களுக்கு முன்னர் தான் எங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் பல ஆண்டுகளாகவே எங்கள் இதயங்களில் வாழ்ந்து வந்தனர். மூன்று குழந்தைகளின் பெருமையான பெற்றோர்கள் நாங்கள். உங்கள் எல்லோருக்கும் இது அதிர்ச்சி என்று கூறியிருக்கிறார்.
மற்றொரு டுவீட்டில், இந்த இரட்டை குழந்தைகள் வாடகை தாய் மூலம் பிறந்துள்ளன. மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ளார்.