சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
இன்றைய இளம் இசையமைப்பாளர்களில் சீனியர் இசையமைப்பாளராக இருப்பவர் யுவன்ஷங்கர் ராஜா. அவர் இசையமைப்பாளராக அறிமுகமாக நேற்றுடன் 21 வருடங்கள் முடிந்திருக்கிறது. 1997ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ம் தேதி வெளிவந்த 'அரவிந்தன்' படத்தின் மூலம் யுவன் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
1999ல் வெளிவந்த 'பூவெல்லாம் கேட்டுப்பார்' படம் அவருடைய இசையமைப் பற்றிப் பேச வைத்தது. பின்னர் 2000ல் வெளிவந்த 'தீனா' படம் அவரை தமிழ் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. தொடர்ந்து வெளிவந்த 'நந்தா, துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7 ஜி ரெயின் போ காலனி' ஆகிய படங்கள் அவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியது. தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு யுவன் இசையமைத்து முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக உயர்ந்தார்.
கடந்த சில வருடங்களாக குறைந்த படங்களில் இசையமைத்த யுவன் இந்த ஆண்டில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்து வருகிறார். 21 வருடங்களைத் திரையுலகில் கடந்தாலும், இன்னும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரது படங்களுக்கு யுவன் இன்னும் இசையமைக்கவில்லை என்பது அவருடைய ரசிகர்களுக்கு வருத்தமாக உள்ளது.
தற்போது யுவன் இசையமைக்கும் படங்களில் 'இரும்புத் திரை, பேரன்பு, சண்டக்கோழி 2, சூப்பர் டீலக்ஸ், சூர்யா 36, மாரி 2, கண்ணே கலைமானே' ஆகிய படங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் படங்களாக அமைந்துள்ளன.