நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் இன்னும் திருமணம் ஆகாமல் இருக்கும் நடிகர்களில் ஆர்யா, விஷால் ஆகிய இருவரும் குறிப்பிடத்தக்கவர்கள். விஷால், நடிகர் சங்கத்திற்கான கட்டிடம் கட்டிய பிறகு, அங்குதான் அவரது திருமணத்தை நடத்த வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். அது போலவே அவருடைய நெருங்கிய நண்பரான ஆர்யாவும் நடிகர் சங்கத்தில்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று பேசி வந்துள்ளார்.
இதனிடையே, சில மாதங்களுக்கு முன்பு தனக்கு வேண்டிய மணப்பெண்ணை தேடுவதாகவும் அதனால் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும் என ஆர்யா டுவிட்டர் மூலம் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான அறிவிப்பு என்று நாம் முன்பே செய்தி வெளியிட்டோம். அந்த நிகழ்ச்சியின் பெயர் 'எங்க வீட்டு மாப்பிள்ளை'. இன்று ஆரம்பமாக உள்ள கலர்ஸ் டிவி தமிழில், நாளை முதல் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
ஆர்யாவுக்கு சிறந்த மணப்பெண்ணைத் தேடித் தருவதற்காக நடிகை சங்கீதா, ஆர்யாவுக்குத் துணையாக அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். ஆர்யாவை தங்கள் அழகு மூலமும், திறமை மூலம் கவர சில பெண்கள் முயற்சி செய்வார்கள். அவர்களில் இருந்து ஒருவரைத் தேர்வு செய்து ஆர்யா திருமணம் செய்து கொள்வதுதான் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியின் கான்செப்ட்.
டிவி நிகழ்ச்சியில் மணப்பெண்ணைத் தேடி, அதில் தேர்வாக உள்ளவரை ஆர்யா உண்மையிலேயே திருமணம் செய்து கொள்ளப் போகிறாரா அல்லது இது வெறும் டிவி நிகழ்ச்சியாக மட்டுமே அமையப் போகிறதா என்பது விரைவில் தெரிந்துவிடும்.