ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
நடிகர்கள் ரஜினி - கமல் இருவருமே அரசியலில் களமிறங்கி உள்ளனர். கமல் வருகிற பிப்., 21-ம் தேதி முதல் தனது அரசியல் பயணத்தை ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆரம்பிக்கிறார். அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன.
மற்றொருபுறம் நடிகர் ரஜினி, மாவட்டம்தோறும் நிர்வாகிகளை நிர்வகித்து வருகிறார். இதற்கான வேலைகள் மும்முரமாய் நடந்து வருகின்றன. இந்த நிலையில் ரஜினியின் போயஸ் தோட்ட இல்லத்தில், அவரது நண்பரும், அரசியல் ஆலோசகருமான தமிழருவி மணியன் இன்று சந்தித்தார்.
இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த சந்திப்பில் ரஜினியின் தீவிர அரசியல் குறித்தும், மாவட்டம் தோறும் நிர்வாகிகளை விரைந்து நியமிப்பது மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்றுள்ளது.
இந்த மாத இறுதிக்குள் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் ரஜினி மக்கள் மன்றத்திற்கான நிர்வாகிகள் அனைவரையும் நியமித்துவிட்டு, அடுத்த மாதம் முதல் தமிழகம் முழுவதும் ரஜினி சுற்றுப்பயணம் மேற்கொள்வது தொடர்பாகவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.