'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
மலேசியாவில் நடக்கும் கலை நிகழ்ச்சிக்காக சென்னை தி.நகரில் உள்ள நடன இயக்குனர் ஸ்ரீதரின் ஸ்டூடியோவில் அமலாபால் ஒத்திகையில் ஈடுபட்டிருந்தபோது அங்கு வந்த தொழில் அதிபர் அழகேசன் என்பவர், அமலாபாலுக்கு பாலியல் ரீதியான டார்ச்சர் கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அமலாபால் மேற்கு மாம்பலம் போலீஸ் நிலையத்துக்கு நேரில் சென்று அவர் மீது புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் அழகேசன் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
அமலாபாலின் இந்த துணிச்சலான நடவடிக்கைக்கு தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர் விஷால் பாராட்டு தெரிவித்திருந்தார். இதற்கு தனது டுவிட்டரில் நன்றி தெரிவித்திருக்கிறார் அமலாபால். அதில், அவர் "நன்றி விஷால், இது ஒவ்வொரு பெண்ணின் கடமை. இதுபோல் பாலியல் ரீதியாக துன்புறுத்தும்போது அதை பெண்கள் சகித்துக் கொள்ளக்கூடாது. அதை எதிர்த்து போராட வேண்டும். அந்த நபர் (தொழிலதிபர் அழகேசன்) என்னை மாமிசத் துண்டைப்போல வியாபாரம் செய்ய நினைத்தார். அவர் அங்கு வந்ததும், இதுபோன்ற பேச்சும் எனக்கு கடும் எரிச்சலை தந்தது" என்று குறிப்பிட்டுள்ளார் அமலாபால்.