சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
விஜய் சேதுபதி நடித்து திரைக்கு வந்த ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தில் நாயகியாக நடித்தவர் நிகாரிகா. தெலுங்கு நடிகையான இவரும், நாக செளரியாவும் ஒக்க மனசு என்ற படத்தில் இணைந்து நடித்தனர். அப்போது அவர்களுக்கிடையே காதல் மலர்ந்ததாகவும், அதையடுத்து அவர்களின் காதலுக்கு பெற்றோர் சம்மதம் சொல்லிவிட்டதால் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் டோலிவுட்டில் பரபரப்பு செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால் இதுகுறித்து நிகாரிகாவிடம் மீடியாக்கள் கேள்வி எழுப்பியபோது, முதலில் அதுகுறித்த கேள்வியை அலட்சியமாக எடுத்துக்கொண்டவர், இப்போது அதற்கு மறுப்பு செய்தி வெளியிட்டுள்ளார். அந்த செய்தியில், சினிமாவில் ஒருவர் வளருகிறார் என்றால் இதுபோன்ற வதந்திகள் பரவுவது சாதாரணமான விசயம்தான். ஆனால் இன்னொரு வதந்தி வெளியாகும்போது இந்த வதந்தி காணாமல் போய் விடும். அதனால் நான் எப்போதுமே வதந்திகளை சீரியசாக எடுத்துக்கொள்வதில்லை என்று கேசுவலாக பதிலளித்துள்ளார் நிகாரிகா.