சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
ஓவியாவுக்கும் சிம்புவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கெமிஸஸ்ட்ரி வொர்க்கவுட்டாகி இருப்பதாக படத்துறையில் பேச்சு அடிபட்டு வருகிறது. சமீபத்தில் இருவரும் இணைந்து மரண மட்ட என்ற பாடலைப் பாடியிருந்தனர். அதன்பிறகு அடிக்கடி பார்ட்டிகளில் சந்தித்துக் கொள்கின்றனர்.
இந்நிலையில் ஓவியா நடிக்கும் புதிய படத்துக்கு சிம்பு இசையமைக்கிறார். ஜே.டி - ஜெர்ரி இயக்கத்தில் 2003-ல் வெளியான படம் 'விசில்', 'மாயாஜால்' மல்டிப்ளக்ஸின் அதிபரான அனிதா, விசில் படத்தின் தயாரிப்பில் முக்கிய பங்கு வகித்தார்.
'பென்டா மீடியா' என்ற அனிமேஷன் கம்பெனியையும் நிர்வகித்து வரும் அனிதா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார். அதாவது, ஓவியா நடிப்பில் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் அனிதா! இந்த படத்திற்குத்தான் இசை அமைக்கிறார் சிம்பு.
சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி தோல்வியடைந்த 'சக்க போடு போடு ராஜா' படத்தின் மூலம் இசை அமைப்பளாராக அறிமுகமான சிம்பு, இசை அமைக்கும் இரண்டாவது படம் இது! ஓவியாவுக்காகவே இசையமைக்க ஒப்புக்கொண்டாராம். இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.