ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சற்குணம் இயக்குநராக அறிமுகமான படம் - 'களவாணி'. அவரது இயக்கத்தில் விமல், ஓவியா இணைந்து நடித்த 'களவாணி' 2010-ல் வெளியாகி கமர்ஷியலாக வெற்றிப் படமாக அமைந்தது. இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகே விமல் பல படங்களில் நடிக்கும் அளவுக்கு பிசியான ஹீரோவாக உயர்ந்தார்.
ஓவியாவுக்கும் பட வாய்ப்புகள் குவிந்தன. ஏற்கெனவே வெளியாகி வெற்றியடைந்த படங்களின் இரண்டாம் பாகங்களை எடுத்து காசு பண்ணுவதுதான் இப்போதைய டிரெண்ட். இந்த வரிசையில் அடுத்து உருவாகவிருக்கும் படம் - 'களவாணி-2'.
இந்த படத்தை களவாணி முதல் பாகத்தை இயக்கிய சற்குணமே தனது 'வர்மன்ஸ் புரொடக்ஷன்ஸ்' என்ற பட நிறுவனம் சார்பில் இயக்கி தயாரிக்கிறார். முதல் பாகத்தில் இணைந்து நடித்த விமல், ஓவியா .இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார்கள்.
'களவாணி-2' படத்தில் நடிக்க முதலில் ஓவியாவை அணுகியபோது மறுத்தவர், இப்போது, சற்குணத்துக்கு தூதுவிட்டு களவாணி-2 படத்தில் இணைந்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கிவிட்டதாக இயக்குனர் சற்குணம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.