ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில் அஜித் நாயகனாக நடிக்க உள்ள படம் 'விஸ்வாசம்'. இப்படத்தின் உருவாக்கத்திற்கான எழுத்துப் பணிகள் முற்றிலுமாக முடிவடைந்துள்ளதாம். விரைவில் படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள், இசையமைப்பாளர் யார் ஆகியவை பற்றி அறிவிக்க உள்ளார்கள். பிப்ரவரி மாதம் 22ம் தேதி முதல் படப்பிடிப்பை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஜுலை மாதத்திற்குள் மொத்த படப்பிடிப்பையும் முடித்து, நான்கு மாதங்கள் இறுதிக் கட்டப் பணிகளை முடித்து நவம்பர் மாதம் தீபாவளியன்று படத்தை திரைக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளார்களாம்.
அஜித் நடிக்கும் படம் என்றால் குறைந்தது ஒரு வருட காலத்திற்கும் மேல் எடுத்துக் கொள்வார்கள். ஆனால், இனி ஒவ்வொரு ஆண்டும் தன்னுடைய ஒரு படம் வெளியாக வேண்டும் என்பதில் அஜித் உறுதியாக இருக்கிறாராம். அதனால்தான், 'விஸ்வாசம்' படத்தை குறுகிய காலத்திற்குள் எடுத்து முடித்து வெளியிட கேட்டுக் கொண்டுள்ளார் என்கிறார்கள். திட்டமிடும் வேலைகளைச் சரியாகச் செய்துவிட்டால் மற்ற வேலைகள் சீக்கிரம் முடியும் என்பதற்காகத்தான் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக திட்டமிடல் பணிகளைச் செய்துள்ளார்கள்.
இசையமைப்பாளர் யார், அஜித் ஜோடி யார் என்பதைக் கூட முடிவு செய்துவிட்டார்கள். ஒரு நல்ல நாள் பார்த்து அந்த அறிவிப்பு வரும் என்பதுதான் கடைசியாகக் கிடைத்துள்ள தகவல்.