சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி |
பர்ஸ் நிறைய ஏடிஎம், கிரெடிட் கார்டுகளாக வைத்திருந்தாலும் செலவுக்கு பணமாக பத்து ரூபாய் கூட இல்லாதவனின் நிலையில் தான் கடந்த ஒரு வருடமாக த்ரிஷா இருந்து வருகிறார். ஆம்.. சதுரங்க வேட்டை-2, மோகினி, 96, 1818, கர்ஜனை, ஹே ஜூடு(மலையாளம்) என அதிக படங்களில் த்ரிஷா நடித்து வந்தாலும், அவர் நடித்த ஒரு படம் கூட ரிலீசாகாமல் 2017ஆம் கண்டு கடந்து போனது..
இந்தநிலையில் இந்த வருடத்தின் அவரது முதல் படமாக, மலையாளத்தில் அவர் முதன்முதலாக நடித்துள்ள ஹே ஜூடு' படம், வரும் பிப்-2ல் வெளியாக இருக்கிறது. நிவின்பாலி கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தை ஷ்யாம் பிரசாத் இயக்கியுள்ளார். கடந்த 2016 அக்டோபரில் வெளியான 'கொடி' படத்தை தொடர்ந்து 15 மாதங்களுக்கு பிறகு த்ரிஷாவின் புதிய படம் ரிலீசாவது குறிப்பிடத்தக்கது.