ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், செந்தில் உள்ளிட்ட பலர் நட்சத்திரங்கள் நடித்து பொங்கல் வெளியீடாக ஜன., 12-ம் தேதி நாளை வெளியாக உள்ள படம் தானா சேர்ந்த கூட்டம். இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்று சூர்யா பேசியதாவது...
தானா சேர்ந்த கூட்டம் படத்தின் படபிடிப்பின் போது நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். இதுவரை நான் நடித்த படங்களிலிருந்து முற்றிலும் புதுமையான படமாக தானா சேர்ந்த கூட்டம் இருக்கும். அனிருத்தின் இசையில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்றுள்ள இப்படத்தின் பாடல்கள் மக்களிடம் “தானா சேர்ந்த கூட்டத்தை“ நல்ல முறையில் கொண்டு சேர்த்துள்ளது.
இப்படத்துக்கென எதிர்பார்ப்பை, கூட்டத்தை அனிருத் இசையில் உருவாகியுள்ள தானா சேர்ந்த கூட்டம் பாடல்கள் அனைத்தும் தென்னிந்தியா முழுவதும் உண்டாக்கியுள்ளது. இதை நான் படத்தை விளம்பரபடுத்த தென்னிந்தியா முழுவதும் பயணித்தபோது தெரிந்துகொண்டேன். இயக்குநர் விக்னேஷ் சிவனோடு பணியாற்றிய அனுபவம் நன்றாக இருந்தது. நான் படத்தில் பிரெஷாக இருப்பதாக அனைவரும் கூறுகிறார்கள். அதற்கு முழு காரணம் விக்னேஷ் தான்.
எனக்கு முன்பை போல் பெரும்பாக்கம் சென்று சாதாரணமான ஒரு கடையில் டீ குடிக்க வேண்டும் என்ற ஆசை ரொம்ப நாளாக உண்டு. அதை விக்னேஷ் சிவன் நிறைவேற்றி வைத்தார். நானும் ஒரு கம்பெனியில் மாதம் 700 ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்த்து அதன் பின் ஒரு நடிகனாகி கடுமையாக உழைத்து தான் இந்த இடத்துக்கு வந்துள்ளேன்.
என்னை போன்ற ஒருவனே வாழ்கையில் இவ்வளவு பெரிய இடத்தை அடைய முடியும் என்றால். கண்டிப்பாக உங்களால் இதைவிட மிகப்பெரிய உயரங்களை அடைய முடியும். இப்போது இருக்கும் சூழ்நிலையில் பல விஷயங்கள் நம்மை சுற்றி நடக்கிறது. யார் என்ன பேசினாலும், என்ன நடந்தாலும், அன்பாவே இருப்போம்.
இவ்வாறு சூர்யா கூறினார்.