ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த ஆண்டு வெளியான படங்களில் பேய் படங்கள் மட்டும் சுமார் 40 படங்கள். இந்த ஆண்டும் பேய் படங்களின் ஆதிக்கம் தொடருகிறது. கடந்த வாரம் டிசம்பர் 29ம் தேதி பலூன், சங்குச்சக்கரம் என்ற இரண்டு பேய் படங்கள் வெளிவந்து ஆண்டு கணக்கை முடித்து வைத்தது. 2018ம் ஆண்டின் முதல் வெள்ளிக்கிழமையான நாளை 4 பேய் படங்கள் வெளிவந்து இந்த ஆண்டுக்கான பேய் கணக்கை துவக்கி வைக்கிறது.
நாளை வெளிவரும் படங்களில் பார்க்க தோணுதே என்ற படத்தில் கிராமத்து பேய் வருகிறது. காதலிக்கு பேய் பிடித்து விட அதை காதலன் எப்படி கையாள்கிறான் என்கிற கதை. ஓநாய்கள் ஜாக்கிரதை என்ற படத்தில் சொந்த அக்கா மகளையே கடத்தி கொல்லும் ஹீரோவை கொல்லப்பட்ட அக்கா மகள் பேயாக வந்து பழிவாங்குகிற கதை.
புதியவர்கள் உருவாக்கி உள்ள டிசம்பர் 13 என்ற படமும் பேய்படம்தான். டிசம்பர் 13ந் தேதி கொல்லப்பட்ட ஒரு பெண் அதே தேதியில் ஆவியாகி வில்லன்களை பழிவாங்கும் கதை. இது தவிர லாஸ்ட் கீ என்ற ஹாலிவுட் பேய் படம், கதவை திற பேய் வரட்டும் என்ற ஸ்லோகத்தோடு வருகிறது. இது இன்ஸிடியஸ் என்ற பேய் படத்தின் 4ம் பாகம். கான்ஜூரிங், அன்னபெல்லா பாணியிலான பேய் படம். இதைத் தொடர்ந்து அடுத்தடுத்த வாரங்களில் பயமுறுத்த பேய் படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.