சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பிரபல சினிமா தயாரிப்பாளர், நடிகர் ஆர்.கே.சுரேஷ். தனது ஸ்டூடியோ 9 நிறுவனம் மூலம் சலீம், தர்மதுரை படங்களை தயாரித்தார், அட்டு, சாட்டை, பரதேசி, சூது கவ்வும், தங்க மீன்கள் உள்பட 20 படங்கள் வரை விநியோகம் செய்துள்ளார்.
தாரை தப்பட்டை படத்தின் மூலம் நடிகரான அறிமுகமான ஆர்.கே.சுரேஷ் அதன் பிறகு மருது, ஹரஹரமகாதேவகி, இப்படை வெல்லும், பள்ளி பருவத்திலே, உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது பில்லா பாண்டி, முகம், கரும்புலி படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். ஸ்கெட்ச் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.
ஆர்.கே.சுரேஷ் அலுவலத்தில் தலைமை செயல் அலுவலராக வேலை பார்த்தவர் திவ்யா. இவர் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு திவ்யாவை தான் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும். இது காதல் திருமணம் அல்ல பெற்றோர்கள் முடிவு செய்தது என்றும் பத்திரிகையாளர் முன் திவ்யாவை அறிமுகம் செய்து அறிவித்தார். எளிய முறையில் நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் டிசம்பர் மாதம் திருமணம் நடக்கும் என்றும் தெரிவித்தார். ஆனால் திட்டமிட்டபடி இந்த மாதம் திருமணம் நடக்கவில்லை. இதனால் திருமணம் நின்றுவிட்டதாக தகவல் வெளியானது.
ஆனால் இதை ஆர்கே.சுரேஷ் தரப்பு மறுத்துள்ளது. ஜாதக பிரச்னை காரணமாக திருமணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்தாண்டு திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது.