Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பெரிய பாண்டியன் நினைவிடத்தில் நின்றபோது நெஞ்சம் பதைபதைத்துவிட்டது : கார்த்தி

15 டிச, 2017 - 14:40 IST
எழுத்தின் அளவு:
Karthi-pay-homage-to-Inspector-Periypandian

தீரன் படம் போன்றே ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராஜ்ஸ்தானில் கொள்ளையர்களை பிடிக்கபோய், வீரமரணம் அடைந்திருக்கிறார், தமிழகத்தை சேர்ந்த மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன். இவரது உடல், அரசு மரியாதையுடன் நெல்லை மாவடத்தில் உள்ள சாலைப்புதூரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. பெரியபாண்டியனின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நடிகர் கார்த்தி அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

இதுகுறித்து கார்த்தி கூறியதாவது... பெரியபாண்டியன் இல்லத்துக்கு சென்று அவருடைய மனைவிக்கு ஆறுதல் தெரிவித்தேன். அப்போது அவர் என்னிடம் “பெரிய பாண்டியன் மிகவும் தைரியமானவர் என்றும். அவர் கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தானுக்கு சென்ற அதே நாளில் தான், நீங்கள் நடித்த தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தை பார்த்தேன். தீரன் படத்தை பார்த்ததும் இவ்வளவு கொடூரமான கொலைகார கொள்ளை கும்பலா?? இதை போன்ற ஒரு கும்பலை தான் நம்முடைய கணவரும் பிடிக்க சென்றிருப்பாரோ என்று தோன்றியது.

அதன் பின் அவரை தொலைபேசியில் அழைத்து பேசினேன். தீரன் படம் பார்த்தேன் அதில் வந்த பயங்கரமான காட்சிகளை பற்றி கூறி என்னுடைய கணவரிடம் கவனமாக இருங்க, உங்களுடன் இன்னும் சில காவல் துறை போர்சை அழைத்து செல்லுங்கள். எனக்கு மனது சரியில்லை என்று கூறினேன். நான் அவருக்கு எதுவும் நடந்துவிட கூடாது என்று பயந்துகொண்டே இருக்கையில் அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி என்னை வந்தடைந்தது“ என்றார்.

உண்மை சம்பவமான தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடிக்கும் போதே எனக்கு எனக்கு இப்படியெல்லாம் நடந்திருக்கிறதே என்று மன அழுத்தமாக இருந்தது. தற்போது அது உண்மையாகவே ஒரு இன்ஸ்பெக்டருக்கு நடந்துள்ளது எனக்கு வருத்தத்தை தந்துள்ளது.

பெரியபாண்டியன் மிகவும் நல்ல மனிதர். அவர் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த 15 சென்ட் இடத்தை அந்து ஊரில் பள்ளிக்கூடம் கட்ட கொடுத்துள்ளார். அவர் கூலி வேலை செய்து வாழ்ந்த ஒரு தாயின் மகன் என்பதால் எப்போதும் தன்னை போல் கஷ்டம் இல்லாமல் எல்லோரும் வாழவேண்டும் என்று நினைப்பவர்.

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற அதே நல்ல எண்ணத்தில் தான் கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் பகுதிக்கு சென்று வீர மரணம் அடைந்துள்ளார். அங்கு மக்கள் அனைவரும் அவருடைய இடத்தில் கட்டப்பட்ட பள்ளிக்கு அவருடைய பெயரை வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அப்படி அவருடைய பெயர் வைக்கப்பட்டால் நன்றாக இருக்கும்.

நமது அரசாங்கம் கண்டிப்பாக போலீஸ் அதிகாரிகளுக்கு இன்னும் நிறைய உள்கட்டமைப்பு வசதிகளை வழங்க வேண்டும். ஈரம் காயாத அவருடைய சமாதியில் நிறுக்கும் போது நெஞ்சம் பதைபதைத்துவிட்டது. அவருடைய ஆன்மாவுக்கும், குடும்பத்தாருக்கும் பிரார்த்தனை செய்கிறேன்.

இவ்வாறு கார்த்தி கூறினார்.

Advertisement
கருத்துகள் (15) கருத்தைப் பதிவு செய்ய
தமிழ் சினிமா ரொம்ப மாறி விட்டது! சந்திரிகா ரவிதமிழ் சினிமா ரொம்ப மாறி விட்டது! ... நடிகர் விக்ரமின் தந்தை காலமானார் நடிகர் விக்ரமின் தந்தை காலமானார்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (15)

தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
16 டிச, 2017 - 12:24 Report Abuse
தமிழர்நீதி அடப்பாவிங்கள பிணத்தில் ஏறிநின்று படத்தை ஓட்ட பார்க்கிறீர்கள் . நடித்து நாடாள பார்க்கிறீர்கள் . உங்கள் வியபார வெறிக்கு அளவே இல்லியா .
Rate this:
Rajendran Selvaraj - Saint Louis, MO,யூ.எஸ்.ஏ
16 டிச, 2017 - 12:08 Report Abuse
Rajendran Selvaraj Where did KAMAL or Rajini go? DMK or ADMK is better than Surya or Karthi
Rate this:
s.rajagopalan - chennai ,இந்தியா
16 டிச, 2017 - 11:53 Report Abuse
s.rajagopalan நாம் நிம்மதியாக தூங்குகிறோம் , வீதியில் அச்சமின்றி செல்கிறோம் ....இதற்கெல்லாம் காரணம் அரசாங்கமோ , அரசியல் தலைவர்களோ காரணமல்ல... வீரபாண்டியன் போன்ற கடமை உணர்வு உள்ள காவல் துறையினர் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும். வணக்கம் பாண்டியரே ?
Rate this:
spr - chennai,இந்தியா
16 டிச, 2017 - 10:35 Report Abuse
spr தீரன் படத்திற்கு இப்படியொரு விளம்பரம் தேட வேண்டிய அவசியம் என்ன?
Rate this:
skv - Bangalore,இந்தியா
16 டிச, 2017 - 03:25 Report Abuse
skv<srinivasankrishnaveni> நெஜூபொறுக்கலீங்க தம்பி அவ்ளோ கனமாயிருக்கு கொலைகாரனுக்கு கொள்ளையே தொழிலாக இருக்கும் அத்தகையவர்கள் எல்லோரையும் போட்டு தள்ளவேண்டும் துடிக்கத்துடிக்க சாவடிக்கவேணும் கூண்டோடு அழியவேண்டும் நம்ம நாட்டுலேயுமே வ்லோ கொள்ளையர்கள் ஆடிக்கார்களிலே வளம் வரானுக ஆனால் எந்த தெய்வமும் இவனுக்களை பழியே வாங்களே அரசியல்லேயே இருந்ததுண்டு தேர்தல்லே நின்னு ஜெயிக்கவெறிய பணம் வாரி இறைக்கும் நாதாரிகளை கழுவுலே தான் ஏற்றவேண்டும்
Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film ONGALA PODANUM SIR
  • ஒங்கள போடணும் சார்
  • நடிகர் : ஜித்தன் ரமேஷ்
  • நடிகை : சனுஜா சோமநாத்
  • இயக்குனர் :ஆர்.எல்.ரவி - ஸ்ரீஜித்
  Tamil New Film Kadhal Munnetra Kazhagam
  Tamil New Film Charlie Chaplin 2
  • சார்லி சாப்ளின் 2
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :ஷக்தி சிதம்பரம்
  Tamil New Film Kanchana 3
  • காஞ்சனா 3
  • நடிகர் : ராகவா லாரன்ஸ்
  • நடிகை : வேதிகா ,ஓவியா
  • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in