அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் |
அபூர்வ ராகங்கள் தொடங்கி கபாலி வரை 40 ஆண்டுகளுக்கு மேலாக தனி ஆளுமை செய்து வரும் நடிகர் ரஜினிகாந்த், தனது 67-வது பிறந்தநாள் கொண்டாடினார். ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலகினர், அரசியல் பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
திமுக., செயல் தலைவர் ஸ்டாலின் : நல்ல உடல் நலத்துடன் நீண்டநாள் வாழ வேண்டும்.
தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர் : மனிதநேயமிக்க பண்பாளர் ரஜினிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
இவர்கள் தவிர தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், மதிமுக., பொதுச்செயலாளர் வைகோ, மேற்கு வங்க முதல்வர் மம்தா உள்ளிட்ட பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நடிகர்களை பொறுத்தமட்டில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, சிவகார்த்திகேயன், தனுஷ், ரஞ்சித், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கள் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.