சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.0 படத்தின் இறுதிகட்ட வேலைகள் ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம், தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் காலா பட வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
காலா படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், தற்போது எடிட்டிங் வேலைகள் நடைபெற்று வருகின்றன. ஜனவரி மாதம் வெளியாவதாக இருந்த 2.0 படத்தின் கிராபிக்ஸ் வேலைகளில் தொய்வு ஏற்பட்டதால், ரிலீஸை ஏப்ரல் மாதத்துக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள். எனவே 2.0 படத்துக்கு முன்னதாக காலா படத்தை வெளியிட திட்டமிட்டாராம் தனுஷ்.
இதற்கு லைகா தரப்பில் ஆட்சேபிக்கப்பட்டதை அடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் காலா படத்தை லைகாவே வாங்கிக் கொள்ளும் முடிவு எடுக்கப்பட்டதாம். அதன் பிறகே 2.0 படத்துக்குப் பிறகு காலாவை வெளியிட்டுக் கொள்ள தனுஷ் சம்மதம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.