சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
விஷாலுக்கு எதிராக உள்ளிருப்பு போராட்டம் நடத்திய தயாரிப்பாளர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
நடிகர் விஷால், நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் உள்ளார். திடீரென ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் களம் இறங்கி வேட்பு மனு தாக்கல் செய்தார். தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, விஷால் ஆர்கே.நகரில் போட்டியிடட்டும் என்று வலியுறுத்தி, இயக்குநர் சேரன் உள்ளிட்ட சில தயாரிப்பாளர்கள், தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து சேரன் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் தங்களது உள்ளிருப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர், தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு விஷால் எதுவும் செய்யவில்லை. அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். கேள்வி கேட்டால் பதில் சொல்ல வேண்டும். வேட்புமனு தாக்கல் செய்ய அனுபவம் வேண்டும் என்றார்.