சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
கௌதம் கார்த்திக்கை வைத்து 'ஹரஹர மகாதேவகி' என்ற அடல்ட் காமெடி படத்தை இயக்கியவர் சந்தோஷ் பி.ஜெயகுமார். அந்தப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது அவர் இயக்கி வரும் படம் 'இருட்டு அறையில் முரட்டுக் குத்து'.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும், இந்த படத்தில் கௌதம் கார்த்திக், வைபவி சாண்டில்யா கதாநாயகன், கதாநாயகியாக நடிக்கிறார்கள். கடந்த சில வாரங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்நிலையில் சந்தோஷ் பி.ஜெயகுமார் இயக்கத்தில் 'ஸ்டுடியோ கிரீன்' நிறுவனம் மற்றுமொரு படத்தையும் தயாரிக்க சமீபத்தில் பூஜை போடப்பட்டிருக்கிறது. இந்த படத்திற்கு 'கஜினிகாந்த்' என்று பெயர் வைத்துள்ளனர். சந்தோஷ் பி.ஜெயகுமார் இயக்கும் மூன்றாவது படமான இப்படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்கிறார்.
'வனமகன்' படத்தில் நடித்தவரும், இப்போது விஜய்சேதுபதியுடன் 'ஜுங்கா', பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருபவருமான சாயிஷா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
இந்த படத்திற்கு 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்திற்கு இசை அமைத்து வரும் பாலமுரளி பாலுவே இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் முதல் வாரம் துவங்கவிருக்கிறது.
'கஜினிகாந்த்'என்று இந்தப்படத்துக்கு பெயர் வைக்கப்பட்டது பல்வேறு சந்தேகங்களை கேள்விகளை எழுப்பியுள்ளது. அதாவது இந்தப்படம் ரஜினியை கிண்டல் பண்ணும் விதத்தில் எடுக்கப்படும் படமா என்பதே இது.