சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
மலையாள நடிகர் நிவின்பாலி தமிழில் நேரடியாக நடித்துள்ள முதல் படம் ரிச்சி. இந்த படத்தை கெளதம் ராமச்சந்திரன் இயக்கியிருக்கிறார். இப் படத்தில் பிரகாஷ்ராஜ், நட்டி நடராஜ், ஸ்ரத்தா ஸ்ரீநாத், லட்சுமி பிரியா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஆடியோ விழா கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவை, ரிச்சி படத்தில் இன்னொரு நாயகனாக நடித்துள்ள நட்டி நடராஜ் புறக்கணித்து விட்டார்.
காரணம், சதுரங்கவேட்டை படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் நட்டி நடராஜ். சில படங்களில் ஷோலோ ஹீரோவாகவும் நடித்துள்ள அவர் இந்த ரிச்சி படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்திருக்கிறாராம். ஆனால், படத்தின் பிரமோஷன்களில் நிவின் பாலியே அதிகமாக இடம்பெற்றிருப்பதோடு, அவருக்கே முதலிடம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆடியோ விழாவின்போது கூட அங்கு வைக்கப்பட்டிருந்த பேனர்களில் நிவின்பாலியே முழுமையாக ஆக்ரமித்திருந்தார். அதோடு படத்தின் டிரைலரிலும் அவருக்கு முதலிடம் கொடுக்கப்பட்டிருந்தது.
இப்படி படத்தின் பப்ளிசிட்டி தொடங்கியதில் இருந்தே நிவின்பாலியை முன்னிறுத்தியே செயல்படுத்தி வருகிறார்கள். இப்படி தன்னை ஓரங்கட்டியதால் தான், ரிச்சி படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து விட்டாராம் நட்டி நடராஜ்.