சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
நேரம் படத்தை அடுத்து மலையாள முன்னணி நடிகரான நிவின்பாலி மீண்டும் நேரடியாக நடித்துள்ள தமிழ்ப்படம் தான் 'ரிச்சி'. மிஷ்கினின் சீடரான கௌதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ளார். ஷ்ரதா ஸ்ரீநாத் மற்றும் 'கள்ளபடம்' லட்சுமி ப்ரியா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, இன்னொரு கதாநாயகனாக 'சதுரங்க வேட்டை' புகழ் நட்டி நடித்திருக்கிறார். பிரகாஷ்ராஜும், விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டியும் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் ஒரு ரவுடி கதாபாத்திரத்தில் நிவின்பாலியும், படகுகளை சரி செய்யும் மெக்கானிக் கதாபாத்திரத்தில் நட்டியும் நடித்துள்ளனர். நீண்ட நாட்களாக தயாரிப்பில் உள்ள இந்தப்படம் கடந்த மே மாதமே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வரும் டிச-8ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.