சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தெலுங்குத் திரையுலகில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். இவருக்கும் தமிழ் சினிமாவிற்கும் ராசி சரியாக இல்லை போலிருக்கிறது. இவர் தமிழில் நாயகியாக நடித்து சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த 'புத்தகம், என்னமோ ஏதோ' ஆகிய படங்கள் தோல்வியடைந்தன.
அதன் பின் சுமார் மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், மகேஷ் பாபு ஜோடியாக 'ஸ்பைடர்' படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்தார். ஆனால், அந்த தோல்வி ராசி 'ஸ்பைடர்' படத்திலும் ஒட்டிக் கொண்டு வந்துவிட்டது. அந்தப் படமும் தோல்வியடைந்தது.
இப்போது கார்த்தி ஜோடியாக 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வரும் நவம்பர் 17ம் தேதி வெளியாக உள்ளது. ரகுல் ப்ரீத்தின் முந்தைய ராசி இந்தப் படத்திலும் தொடராமல் இருக்கும் என்று நம்புவோம். படத்தில் ஒரு சுவாரசியமான கதாபாத்திரத்தில் ரகுல் நடித்திருக்கிறார் என்று கார்த்தி மனதாரப் பாராட்டியுள்ளார்.
ரகுலும் தெலுங்கில் பல படங்களில் நடித்திருந்தாலும் 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் நடித்ததைப் போன்ற ஒரு கதாபாத்திரத்தில் இதுவரை நடித்ததில்லை என்று பெருமையாகச் சொல்லியிருக்கிறார். ரகுலுக்கும் வரவிருக்கம் 'தீரன் அதிகாரம் ஒன்று' பெருமை சேர்க்கும் படமாக அமைந்து அவருடைய ராசியை மாற்றட்டும்.