சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
'மெர்சல்' படம் தான் வெளிவந்து விட்டதே இன்னும் என்ன பட டீசரின் சாதனை பற்றிய தகவல் என்று கேட்பது புரிகிறது. படம் வெளியாவதற்கு ஒரு நாள் முன்பு வரை 2 கோடியே 93 லட்சம் பார்வைகள் மட்டுமே 'மெர்சல்' டீசருக்கு இருந்தது. ஆனால், படம் வெளியான தினத்தில் ஒரேயடியாக 13 லட்சம் பார்வைகளைக் கடக்கிறது என்றால் சும்மாவா. தற்போது வரை 3 கோடியே 6 லட்சம் பார்வைகைளைப் பெற்றிருக்கிறது 'மெர்சல்' டீசர்.
'மெர்சல்' படத்தின் டிரைலர் வெளிவரும் என்று விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள். ஆனாலும், அவர்களது எதிர்பார்ப்புக்கேற்ப டிரைலர் வரவில்லை என்றாலும் படம் அமைந்துவிட்டதால் அவர்கள் திரும்பத் திரும்ப டீசரைப் பார்த்து அதன் பார்வை எண்ணிக்கைகளை உயர்த்தியிருப்பார்கள் போலிருக்கிறது.
10 லட்சம் லைக்குகள் 3 கோடி பார்வைகளைப் பெற்று 'மெர்சல்' டீசர் யு டியூபில் தனி இடத்தைப் பிடித்துள்ளது. லைக்குகள் கணக்கில் உலக சாதனை படைத்து முதலிடத்தில் இருக்கிறது. இருந்தாலும் பார்வைகளின் எண்ணிக்கையில் ரஜினிகாந்தின் 'கபாலி' டீசர் சாதனையை முறியடிக்க இன்னும் 38 லட்சம் பார்வைகள் கிடைக்க வேண்டியிருக்கிறது. அதையும் கடக்க முடியும் என்பது விஜய் ரசிகர்களின் கையில் தான் உள்ளது. '2.0' படத்தின் டீசர் வருவதற்குள் அந்த சாதனை நடக்குமா என்பதுதான் கேள்வி.