சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பிரபல கன்னட நடிகர் துருவா சார்ஜா. இவருக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. இதனை ஸ்ருதி மறுத்து தனது டுவிட்டரில் பதிவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மற்றொரு நடிகரான ஜக்கேஷ் டுவிட்டரில் ஸ்ருதியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
"கர்நாடகாவில் நிறைய அழகான பெண்கள் உள்ளனர். பிறகு ஏன் கன்னட தயாரிப்பாளர்கள் ஸ்ருதி வீட்டு வாசல் முன் நின்று பிச்சை எடுக்கிறார்கள். இந்த தயாரிப்பாளர்கள் திருந்தவே மாட்டார்கள். ஸ்ருதிஹாசனை விட கர்நாடக கல்லூரி மாணவிகள் அழகானவர்கள். ஸ்ருதியை மேக்அப் இல்லாமல் பார்த்தால் அனைவரும தெறித்து ஓடுவார்கள்" என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதற்கு ஸ்ருதியின் ரசிகர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருதுகிறார்கள். "கன்னடப் படத்தில் நடிக்கவில்லை என்று விளக்கம் கொடுத்தது தப்பா, அது ஒரு குற்றமா? அதற்காக யாராவது இப்படி தரம் தாழ்ந்து விமர்சிப்பார்களா?" என்று ஸ்ருதி தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.