சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தெறி படத்தை அடுத்து அட்லி - விஜய் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் மெர்சல். முதன்முறையாக விஜய் மூன்று வேடங்களில நடித்திருப்பதால் இந்த படத்திற்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட்லுக், டீசர், பாடல்கள் என ஒவ்வொன்றும் வெளியானபோது பெரிய அளவில் டிரன்டிங் செய்து வந்த விஜய் ரசிகர்கள், தீபாவளிக்கு மெர்சல் வெளியாகயிருப்பதால் வரவேற்க தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், தமிழகத்தில் கேளிக்கை வரி பிரச்சினை காரணமாக ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டிருப்பதால், திட்டமிட்டபடி தீபாவளிக்கு தமிழ்நாட்டில் மெர்சல் வெளியாகுமா? என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், தீபாவளிக்கு கேரளாவில் விஜய்யின் மெர்சல் இதுவரையில்லாத அளவுக்கு அதிகப்படியான தியேட்டர்களில் வெளியாகிறதாம். அங்குள்ள விஜய் ரசிகர்களுக்கு மட்டும் சுமார் 100 ஸ்பெஷல் காட்சிகள் திரையிடப்படுகிறதாம்.