சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
முன்னணி நடிகை சமந்தாவும், முன்னணி நடிகர் நாக சைதன்யாவும் நாளை(அக்., 5) கோவாவில் திருமணம் செய்து கொள்கிறார்கள். அந்த திருமணம் பற்றிய சில துளிகள்...
நாக சைதன்யா இந்து குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் நாளை காலை இந்து முறைப்படி புரோகிதர்களைக் கொண்டு திருமணம் நடத்தப்படுகிறது. சமந்தா கிறிஸ்தவர் என்பதால் நாளை மறுநாள் (7ந் தேதி) காலை கோவாவில் உள்ள பெரிய தேவாலயத்தில் கிறிஸ்தவ பாதிரியார்கள் திருமணத்தை நடத்துகிறார்கள்.
திருமணம் தொடர்பான நிகழ்ச்சிகள் கோவாவில் உள்ள 7 நட்சத்திர ஓட்டலான டபிள்யூவில் நடக்கிறது. திருமணம் நடக்கும் ஹாலின் ஒரு நாள் வாடகை 60 லட்சம் ரூபாய்.
திருமண விழாக்களுக்கு நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் என 150 பேர் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் டபிள்யூ ஓட்டலிலேயே தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஓட்டல் அறையின் ஒரு நாள் வாடகை 16 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை.
இந்து முறைப்படியான திருமணத்தன்று ஆந்திரா பாணி விருந்தும், கிறிஸ்தவ முறைப்படியான திருமணத்தன்று மேற்கத்திய பாணியில் விருந்தும் நடக்கிறது. திருமண சாப்பாட்டு செலவு மட்டும் 2 கோடி ரூபாய்.
திருமண ஏற்பாடுகளை கவனிக்க மணமகனின் தந்தை நாகார்ஜுனாவும், மனைவி அமலாவும் 3 நாட்களுக்கு முன்பே கோவா சென்று விட்டனர். சமந்தா குடும்பத்தினரும் உடன் சென்றுள்ளனர்.
திருமணத்துக்கு பிறகு ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் திரையுலகினர் கலந்து கொள்கிறார்கள். வரவேற்பு நிகழ்ச்சிக்கான செலவு ரூ.10 கோடி என்கிறார்கள். இதனை நாகசைதன்யாவும், சமந்தாவும் இணைந்து செலவு செய்கிறார்கள்.