சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
களவாணி படத்தில் அறிமுகமான ஓவியாவை இதுவரை திரையுலகம் அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. அதனால் சர்வைவலுக்காக அவ்வப்போது சின்ன பட்ஜெட் படங்களில் எல்லாம் நடித்து காலத்தை ஓட்டிக்கொண்டிருந்தார். இத்தனை வருடங்களாக சினிமாவில் சம்பாதித்த புகழைவிட அதிகமான புகழை 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் சம்பாதித்துவிட்டார் ஓவியா.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு இப்போது தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் பிரபலமடைந்திருக்கிறார். இதனால் திரைப்படங்களிலும், மெகாசீரியல்களிலும், விளம்பரங்களிலும் நடிப்பதற்கு ஓவியாவை அணுகி வருகின்றனர். டிவி சீரியல வேண்டாம் என்பதில் தெளிவாக இருக்கும் ஓவியா, தான் கேட்கும் சம்பளத்தைக் கொடுத்தால் தான் நடிப்பேன் என்கிறாராம்.
அதன்படி, தற்போது 3 படங்களில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார் ஓவியா. லேட்டஸ்ட், தகவலின்படி, யு டியூப் சேனலான 'டெம்பிள் மங்கி' புகழ் விஜய் வரதராஜ் இயக்குநராக அறிமுகமாகவிருக்கும் 'பார்த்து பல்லு படாம' என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் ஓவியா.
இந்தப்படத்தில் தெலுங்கு நடிகர் ஆதித்யா ஹீரோவாக நடிப்பதன் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ஹரஹர மகாதேவகி பாணியில், இளைஞர்களைக் கவரும் வகையில் அடல்ட் காமெடிப்படமாக இப்படம் உருவாகவிருக்கிறது.