சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
நளனும் நந்தினியும், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகிர்தண்டா, பூஜை, தெறி, தர்மதுரை, தொண்டன் உள்பட பல படங்களில் குணச்சித்ர வேடங்களில் நடித்திருக்கும் சவுந்தர்ராஜா எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். தற்போது திருட்டு பயலே 2, கள்ளன், சிலுக்குவார்பட்டி சிங்கம், பில்லா பாண்டி, அருவா சண்டை படங்களில் நடித்து வருகிறார். இதோடு அபிமன்யூ என்ற படத்தில் கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
எல்லா நடிகருக்கும் போலீஸ் கேரக்டர் ஒரு கனவாக இருக்கும். அது இப்போது சவுந்தர்ராஜாவுக்கு அமைந்திருக்கிறது. இதற்காக உடம்மைப குறைத்து பயிற்சி எடுத்து நடித்திருக்கிறார் சவுந்தர்ராஜா. இது காவல்துறை பற்றிய படம் என்பதால் இதன் டீசரை காவல்துறை அதிகாரி அஸ்ரா கார்க் வெளியிட்டார். இவர் பாப்பாபட்டி, கீரிப்பட்டி தேர்தலை பாதுகாப்பாக நடத்தியவர். படத்தை புதுமுக இயக்குனர் சக்திவேல் இயக்குகிறார். சரண் ஒளிப்பதிவு செய்கிறார்.