சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
மெர்சல் படத்தின் பட்ஜெட் எவ்வளவு என்பது பற்றி உறுதிசெய்யப்படாத தகவல்களே இதுவரை வெளியாகிக் கொண்டிருந்தன. தற்போது அப்படத்தின் பட்ஜெட் 135 கோடி என அதிகாரபூர்வமாக தெரிய வந்துள்ளது. தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள மெர்சல் படத்தை அட்லீ இயக்கியுள்ளார்.
விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யாமேனன், வடிவேலு, சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கும் மெர்சல் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஐடி கம்பெனி ஒன்றில் தற்போது நடைபெற்று வருகிறது. இதோடு ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைய உள்ளது. இன்னொரு பக்கம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பின்னணி இசைக்கோர்ப்பு பணிகளைத் துவங்கியுள்ளார்.
இதற்கிடையில் மெர்சல் படத்தின் அமெரிக்க வெளியீட்டு உரிமையை ATMUS மற்றும் US Tamil LLC ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து வாங்கியிருக்கின்றன. இந்த நிறுவனங்கள் விடுத்துள்ள ஒரு அறிவிப்பில் மெர்சல் படம் 135 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவேகம் படத்தின் பட்ஜெட் ரூ.80 கோடியில் உருவானது. அதுவே சில ஏரியாக்களில் நஷ்டம் என்கிறார்கள். இந்நிலையில் அதைவிட 50 கோடி அதிக பட்ஜெட்டில் மெர்சல் உருவாகி இருக்கிறது. என்ன நடக்கப்போகிறதோ?