சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
ரஜினி, கமல் படங்களுக்குப் பிறகு வெளிநாடுகளில் பெரிய பிசினஸ் விஜய் நடித்த படங்களுக்குத்தான். அந்தவகையில், அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து, தீபாவளிக்கு ரிலீஸாகவிருக்கும் 'மெர்சல்' படத்திற்கும் வெளிநாடுகளிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதனால், 'மெர்சல்' படத்தின் அமெரிக்க வெளியீட்டு உரிமையை வாங்குவதில் கடும் போட்டி நிலவியது.
இந்நிலையில், இப்படத்தின் யுஎஸ்ஏ ரைட்ஸை அட்மஸ் என்ற நிறுவனம் வாங்கி உள்ளது. முன்னணி ஹீரோக்கள் நடிக்கும் தமிழ்ப் படங்களை வாங்கி அமெரிக்காவில் தங்களது சொந்த பேனரிலேயே வெளியிடும் இந்நிறுவனம், முதன்முறையாக யுஎஸ் தமிழ் எல்எல்சியுடன் இணைந்து ரிலீஸ் செய்யவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள்.