சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தமிழில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் வேட்டை படம், இந்தியிலும் உருவானால் அதில் நானே நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் நடிகை சமீரா ரெட்டி. லிங்குசாமி இயக்கத்தில், மாதவன், ஆர்யா, சமீரா, அமலாபால் ஆகியோர் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகி சக்க போடு போட்டு கொண்டிருக்கும் படம் வேட்டை. யு.டி.வி., தயாரித்த இப்படம், படத்தின் தயாரிப்பாளர் ரோனி ஸ்குரூவாலாவுக்கு ரொம்பவே பிடித்து போய்விட்டது. இதனால் லிங்குசாமியை கூப்பிட்டு பாராட்டியதோடு இப்படத்தை இந்தியிலும் எடுக்கலாம் என்று கூறியிருக்கிறார். லிங்குசாமியும் இந்தியில் இயக்க தயாராகி வருகிறார். இந்தி வேட்டையில் சல்மான், ரன்பீர் நடிப்பார்கள் எனத் தெரிகிறது. மேலும் இந்தியிலும் சமீரா நடிப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சமீராவிடம் கேட்டபோது, இந்தியிலும் வேட்டை படம் உருவானால் அதில் நடிக்க நான் ரொம்ப ஆவலாக இருக்கிறேன். தமிழ் வேட்டையில் நடித்த ரோலே இந்தி வேட்டையிலும் கிடைத்தால் இன்னும் சந்தோஷப்படுவேன் என்றார். சரி தமிழ் வேட்டையில் நடித்த அனுபவம் பற்றி கூறுங்கள் என்று கேட்டபோது, ஆர்யா, மாதவன், அமலா பால் என படத்தின் ஒட்டுமொத்த டீமும் என்னை உற்சாகப்படுத்தினர் என்று கூறிய சமீரா, தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்கவே அதிக ஆர்வம் இருப்பதாகவும் தெரிவித்தார்.