சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே திரைக்கு வந்துள்ள அஜீத்தின் விவேகம், கலவையான விமர்சனங்களை சந்தித்தபோதும் வசூல்ரீதியாக எந்தவித பாதிப்பும் இல்லாமல் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையே வழக்கம்போல் விவேகம் படம் குறித்து பாதகமான விமர்சனங்களை கொடுப்பவர்களிடம் அஜீத்தின் ரசிகர்கள் இணையதளங்களில் சண்டை போடுவதும் காரசாரமாக நடந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், விவேகம் படம் வெளியான அடுத்த நாள் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு டைரக்டர் ஷங்கரும் தனது 2.ஓ படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ரீச்சாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கபாலி படத்தின் டீசரில் பாதியைத்தான் தொட்டது 2.ஓ மேக்கிங் வீடியோ. இதனால் அப்படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதோடு, விவேகம் படத்தின் ரிலீசுக்கு சில தினங்களுக்கு முன்பு விஜய்யின் மெர்சல் படத்தின் ஆடியோ வெளியானது. அப்போது சில தினங்களில் மெர்சல் டீசர் வெளியாகும் என்று தெரிவித்தனர். ஆனால், தற்போது விவேகம் படம் பரப்பாக ஓடிக்கொண்டிருப்பதோடு, ரசிகர்கள் மத்தியில் விவேகம் குறித்த டாக்கே போய் கொண்டிருப்பதால், இப்போதைக்கு டீசரை வெளியிட வேண்டாம் என்று மெர்சல் படக்குழு தேதியை மாற்றி விட்டதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது.