சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தமிழ்ப் படங்களின் டீசர், டிரைலர் ஆகியவற்றை யு டியூபில் மட்டுமே அதிகமாக வெளியிட்டு வந்தார்கள். சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டுவிட்டர் ஆகியவற்றில் அவற்றை வெளியிடுவது குறைவாகவே இருந்தது. அப்படியே வெளியிட்டாலும் அந்த சாதனையைப் பற்றி அதிகம் கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். யு டியுப் சாதனையைப் பற்றி மட்டுமே அதிகமாகப் பகிர்ந்து கொண்டார்கள்.
ஆனால், தெலுங்கில் சமீப காலமாக அதிலும் 'பாகுபலி 2' டிரைலர் வெளியான பிறகு சமூக வலைத்தளங்களின் சாதனைகளையும் சேர்த்து 'டிஜிட்டல் வியூஸ்' என யு டியூப், பேஸ்புக் ஆகியவற்றின் சாதனைகளைச் சேர்த்து டிஜிட்டல் பார்வை எண்ணிக்கையை வெளியிட்டார்கள். அப்போதே இது விரைவில் தமிழிலும் எதிரொலிக்கும் என நாம் சொல்லியிருந்தோம். அதை 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தின் டிரைலர் மூலம் தனுஷ் ஆரம்பித்துவைத்தார். அந்தப் படத்தின் டிரைலர் யு டியூபில் மட்டும் 12 மில்லியனையும், பேஸ்புக்கில் 6 மில்லியனையும் பெற்றுள்ளது. அந்த சாதனையை இதுவரை தனுஷ் தரப்பில் அதிகமாகப் பரப்பவும் இல்லை.
தனுஷ் செய்த அந்த விஷயத்தை சிவகார்த்திகேயனும் அப்படியே 'வேலைக்காரன்' டீசர் வெளியீட்டிலும் தொடர்ந்தார். அப்படத்தின் டீசர் யு டியூப், பேஸ்புக் ஆகியவற்றில் வெளியிடப்பட்டது. இந்த இரண்டு நாளில் அந்த டீசர் யு டியூபில் 23 லட்சம் பார்வைகளையும், பேஸ்புக்கில் 33 லட்சம் பார்வைகளையும் கடந்துள்ளது. எதையும் கொஞ்சம் அதிகமாகச் சொல்லி பரப்பும் சிவகார்த்திகேயன் தரப்பினர் நேற்றே 'வேலைக்காரன் டீசர் 5 மில்லியன் டிஜிட்டல் பார்வை' என்பதை டிவிட்டரில் டிரென்டிங்கில் வர வைத்தனர். படத்தின் வசூலை எதிர்பார்க்கிறார்களோ இல்லையோ, இந்த சாதனையையும், டிரென்டிங்கையும் பெரிதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இனி, விஜய், அஜித் படங்களின் டீசர், டிரைலர்களும் 'டிஜிட்டல் பார்வை சாதனை'யைப் பற்றிப் பேச ஆரம்பிக்கும்.
சீச்சீ... இந்தப் பழம் புளிக்கும், காசு கொடுத்துதான் அனைத்தையும் செய்கிறார்கள் என சிம்பு பகிரங்கமாகக் குற்றம் சாட்டி, சமூக வலைத்தளங்களை விட்டே விலகிவிட்டார். ஆனாலும், மற்றவர்கள்.... விடமாட்டார்கள்.