சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
விக்ரம் தற்போது நடித்து வரும் படங்களில் 'ஸ்கெட்ச்' படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் போய்க்கொண்டிருக்கின்றன. ஸ்கெட்ச் படத்துக்கு முன் துவங்கப்பட்ட படம் துருவ நட்சத்திரம். கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் 'துருவ நட்சத்திரம்' படத்திற்கான படப்பிடிப்பு இன்னும் 20 நாட்கள் மீதமிருக்கிறது.
இதனிடையே விக்ரம், ஏற்கனவே திட்டமிட்டபடி சாமி-2 படத்தில் நடிக்க தயாராகிவிட்டார். ஹரி இயக்கத்தில் வெளிவந்து சூப்பர்ஹிட் வெற்றியைப் பெற்ற படம் - 'சாமி'. இந்தப் படத்தின் 2ஆம் பாகத்தில் நடிக்க ஒப்பந்தமான விக்ரம் அதற்கு முன்னதாக கைவசம் உளள படங்களை முடித்துவிட திட்டமிட்டார்.
இப்படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 15ஆம் தேதி துவங்கவிருக்கிறது. ஷிபு தமீன் தயாரிப்பில் உருவாகவிருக்கும் 'சாமி 2'வுக்கான படப்பிடிப்பை தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் நாயகிகளாக நடிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.