சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தெறியைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மெர்சல். முதன்முறையாக விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தின் ஆளப்போறான் தமிழன் என்ற சிங்கிள் டிராக் பாடல் சமீபத்தில் வெளியாகி விஜய் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவை பெற்றிருக்கிறது. எப்போதுமே விஜய், அஜித் ரசிகர்கள், தங்கள் நடிகர்களின் சம்பந்தப்பட்ட போஸ்டர், டீசர், பாடல் என எது வெளியானாலும் அதை இணையதளங்களில் போட்டி போட்டு டிரன்டிங் செய்து வடுகிறார்கள்.
அந்தவகையில், விஜய்யின் மெர்சல் படத்தின் ஆளப்போறான் தமிழன் என்ற பாடல் வெளியானதில் இருந்து விஜய் ரசிகர்கள் இணையதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலாக்கி விட்டனர். அதன்காரணமாக, கடந்த வாரம் கூகுள் தேடலில் விஜய்யின் மெர்சல் சிங்கிள் டிராக் பாடல் தான் முதலிடம் பிடித்திருக்கிறது. இப்படியொரு வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து விரைவில் மெர்சல் படத்தின் இன்னொரு பாடலையும் வெளியிடப் போகிறார்களாம். ஆக, மெர்சல் திரைக்கு வருவது வரை இணையதளங்களில் விஜய் ரசிகர்களின் ஆளுமை அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது.