சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
லிங்கா படம் வரை முன்னணி டைரக்டர்களுக்கே கால்சீட் கொடுத்து வந்தார் ரஜினி. அந்த வகையில், அவரை ஒரு குறிப்பிட்ட இயக்குனர்களே தொடர்ந்து இயக்கி வந்தனர். ஆனால், கபாலி படத்திற்கு பிறகு அந்த நிலை மாறி விட்டது. அட்டகத்தி, மெட்ராஸ் என்ற இரண்டு படங்களை இயக்கிய ரஞ்சித், மூன்றாவது படத்திலேயே ரஜினியை இயக்கினார். அதையடுத்து இப்போது காலா படத்தையும் இயக்கி வருகிறார்.
இதனால் ரஜினி நமக்கெல்லாம் கால்சீட் தருவாரா? என்று விலகி நின்று கொண்டிருந்த இளவட்ட டைரக்டர்களுக்கு பா.ரஞ்சித்திற்கு அவர் இரண்டாவது முறையாகவும் கால்சீட் கொடுத்து நடித்து வருவதால், கதை பிடித்து விட்டால் ரஜினி நமக்கும் கால்சீட் தருவார் என்கிற நம்பிக்கை ஏற்பட்டு விட்டது. அதனால் சில இளம் டைரக்டர்கள் கதையுடன் ரஜினியை சந்தித்து வருகிறார்கள்.
அந்த வகையில், தனுசுக்கு நெருக்கமான இயக்குனரான வெற்றி மாறனும் ரஜினியை சந்தித்து கதை சொல்லியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பை தனுஷே உருவாக்கிக் கொடுத்துள்ளாராம். அந்த வகையில், தற்போது வடசென்னை படத்தை இயக்கி வரும் வெற்றிமாறன், இந்த படத்தை முடித்ததும் ரஜினி படத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது.