சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
கமல் நடித்த விஸ்வரூபம், உத்தமவில்லன் படங்களில் நடித்தவர் பூஜாகுமார். அதையடுத்து மீன்குழம்பும் மண்பானையும் படத்தில் நடித்த அவர், தற்போது தெலுங்கில், டாக்டர் ராஜசேகர் நடிக்கும் பிஎஸ் கருடவேகா படத்தில் நடிக்கிறார். இதற்கு முன்பு நடித்த படங்களை விட அழுத்தமான வேடம் என்பதால் இந்த படத்தில் பூஜாகுமாரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறும் என்கிறார்கள்.
இந்த நிலையில் பூஜாகுமார் ஒரு கடற்கரையில் பிகினி உடையணிந்து விதவிதமான போஸ் கொடுத்துள்ள போட்டோக்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் ஒரு போட்டோவை தனது டுவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டிருக்கிறார் பூஜா. அந்த போட்டோவில் 40 வயதாகும் பூஜாகுமார், இன்னும் இளமையாக இருப்பதால் ரசிகர்கள் அவருக்கு லைக் கொடுத்து அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள்.