சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் ஒரு படம் எவ்வளவு தியேட்டரில், எத்தனை காட்சிகளில் வெளியாகிறது என்பதை சாதனையாகப் பார்த்தார்கள். அதன் பின் அந்தப் படம் எத்தனை நாள் ஓடுகிறது என்பதையும், எவ்வளவு வசூலித்தது என்பதையும் சாதனையாகப் பார்த்தார்கள். இப்போதெல்லாம் அதெல்லாம் சாதனையாகப் பார்க்கப்படுவதை விட யு டியூபிலை எவ்வளவு பேர் பார்த்தார்கள், எவ்வளவு பேர் லைக் செய்தார்கள், எவ்வளவு பேர் ரிடுவீட் செய்தார்கள் என்று பார்ப்பதுதான் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
அந்த வித சாதனையில் டுவிட்டரில் ஒரு புதிய ரிடுவீட் சாதனையை ஏற்படுத்தியிருக்கிறது 'மெர்சல்' படத்தின் முதல் பார்வை. கடந்த மாதம் 21ம் தேதி விஜய்யின் டுவிட்டர் அக்கவுண்ட்டில் 'மெர்சல்' படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டது. அதை தற்போது வரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ரிடுவீட் செய்துள்ளனர். இது ஒரு புதிய சாதனையாம். அந்த முதல் பார்வையை 89 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். அடுத்து வெளியான இரண்டாவது பார்வையை 40 ஆயிரம் பேர் ரிடுவீட் செய்துள்ளனர். 72 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர்.
முதல் பார்வையில் புதிய சாதனையைப் படைத்துள்ள 'மெர்சல்' படத்தின் டீசருக்காக விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 'விவேகம்' டீசரின் சாதனையை முறியடிக்க 'மெர்சல்' டீசரால் மட்டுமே முடியும் என அவர்கள் இப்போதே பேச ஆரம்பித்துவிட்டார்கள்.