சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
1993ல் செல்வா இயக்கிய படம் அமராவதி. இந்த படத்தில்தான் அஜீத் நாயகனாக அறிமுகமானார். அவருடன் சங்கவி, நாசர், தலைவாசல் விஜய் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்தனர். அந்த படத்தை சோழா பொன்னுரங்கம் தயாரித்திருந்தார். அதையடுத்து ஆசை, காதல் கோட்டை படங்களுக்குப் பிறகு பிரபல நடிகர் அந்தஸ்தை பெற்ற அஜீத், தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராகி விட்டார்.
அந்தவகையில், தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விவேகம் படத்தில் நடித்துள்ளார். வருகிற ஆகஸ்ட் 3-ந் தேதியோடு அவர் திரையுலகத்துக்கு வந்து 25 வருடங்கள் ஆகிறதாம். அன்றைய தினத்தில் விவேகம் படத்தின் டிரெய்லர் வெளியாகிறது. அதனால் அஜீத்தின் 25 வருட திரைப் பயணம், விவேகம் படத்தின் டிரெய்லர் என அன்றைய தினத்தை சிறப்பாக கொண்டாட தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் அஜீத் ரசிகர்கள்.