மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் | ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் | அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? |
படத்தில் நடித்திருந்தால் கூட இப்படி ஒரு வரவேற்பு ஓவியாவுக்கு கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்தான். கடந்த இரண்டு வார காலமாகவே சமூக வலைத்தளங்களில் ஓவியா பற்றி பல மீம்ஸ்கள் பறந்து கொண்டிருக்கின்றன. 20 நாட்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வரும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் இதுவரை ஸ்ரீ, அனுயா, கஞ்சா கருப்பு, பரணி, ஆர்த்தி ஆகியோர் வெளியேறிவிட்டார்கள். மீதமுள்ள 10 போட்டியாளர்களில் அடுத்து யார் வெளியேறப் போகிறார்கள் என்பது வாரா வாரம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மற்ற போட்டியாளர்களுடன் ஒப்பிடும் போது ஓவியாவிற்கு சமூக வலைத்தளங்களில் பரவலான வரவேற்பு உள்ளது. கடந்த வாரம் வெளியேறும் போட்டியாளர்களில் ஓவியாவிற்கு அதிக வாக்குகள் கிடைத்து அவர் காப்பாற்றப்பட்டார். இந்த வாரமும் ஓவியாவை வெளியேறும் போட்டியாளர்களில் பரிந்துரை செய்துள்ளனர். இது மீண்டும் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாரமும் ஓவியாவைக் காப்பாற்ற வேண்டும் என்று நேற்று இரவிலிருந்தே மீம்ஸ்கள் மீண்டும் பறக்க ஆரம்பித்துவிட்டன.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் எதைப் பற்றியும் கவலைப்படாத, யாரைப் பற்றியும் புறம் பேசாத ஓவியாவின் குணம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இத்தனை வருடங்களாக அவர் படங்களில் நடித்து வாங்காத பெயரை இந்த ஒரு நிகழ்ச்சியில் வாங்கிவிட்டார். அவர் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் வெற்றி பெறுகிறாரோ இல்லையோ, வெளியில் வந்தால் நிறைய படங்களில் நடிப்பார் என்று மட்டும் எதிர்பார்க்கலாம்.