பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் |
1954ம் ஆண்டு கருணாநிதி திரைக்கதை வசனத்தில் அம்மையப்பன் என்ற படம் தயாரானது. இதில் எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஜி.சகுந்தலா, டி.வி.நாராயணசாமி, எஸ்.வரலட்சுமி நடித்தனர். பீம்சிங் இயக்கினார்.
அதேபோல ஜெமினி நிறுவனத்தின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் கே.ராம்நாத் இயக்கத்தில் சுகம் எங்கே என்ற படம் தயாரானது. இதில் கே.ஆர்.ராமசாமி, சாவித்ரி, பி.எஸ்வீரப்பா, தங்கவேலு நடித்தனர். ஏ.கே.வேலனும், கண்ணதாசனும் வசனம் எழுதினார்கள்.
இரண்டு படத்துக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால் இரண்டு படங்களுமே ஒரே ஆங்கிலப் படத்தை தழுவி எடுக்கப்பட்டடது. இரண்டுமே ஒரு கதையுள்ள படங்கள். வித்தியாசம் என்னவென்றால் கருணாநிதி வசனம் எழுதிய அம்மையப்பன் சரித்திர படமாகவும், கண்ணதாசனம் வசனம் எழுதிய சுகம் எங்கே சமூக படமாகவும் தயாரானது.
இந்த நேரத்தில் அரசியல்ரீதியாக பிரிந்திருந்த கண்ணதாசனும், கருணாநிதியும் படத்தின் கதை சம்பந்தமாக எழுத்திலும், பேச்சிலும் மோதிக்கொண்டார்கள். வெற்றி பெறுவது சரித்திரமா, சமூகமா என ரசிகர்கள் மோதிக் கொண்டார்கள். சுகம் எங்கே வெளிவந்த இரண்டு வாரத்திற்கு பிறகு அம்மையப்பன் வெளிவந்தது. இரண்டு படங்களுமே பெரிய வெற்றி பெறவில்லை. என்றாலும் சுகம் எங்கே பரவலான பாராட்டை பெற்றது.