சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தமிழ்த் திரையுலகத்தினர் தமிழக அரசாங்கத்திடம் தியேட்டர் டிக்கெட் கட்டணங்களுக்காக விதிக்கப்பட்ட கேளிக்கை வரி விதிப்பை எதிர்த்துத்தான் தியேட்டர்களை மூடி போராட்டம் நடத்துகிறார்கள் என்று பெரும்பாலானோர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அது உண்மையில்லை. அவர்கள் போராட்டம் நடத்துவதே தியேட்டர் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த வேண்டும் என்பதற்காகத்தான். இப்போதுள்ள டிக்கெட் கட்டணத்தில் 50 சதவீதத்திற்கும் மேல் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கையுடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு முன்னதாக கேளிக்கை வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றால் குறிப்பிட்ட தொகையை லஞ்சமாகக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் கேளிக்கை வரி விலக்கு கிடைக்கும். அப்படிக் கொடுக்காதவர்களின் படங்கள் 'யு' சான்றிதழ் பெற்றிருந்தாலும் அதில் ஏதாவது ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டு, அந்த காரணத்தால் வரி விலக்கு இல்லை என்று மறுத்துவிடுவார்களாம். இதை திரையுலகத்தைச் சார்ந்த சிலரே வெளியில் சொல்லியிருக்கிறார்கள். அன்று தங்கள் படங்களுக்கு வரி விலக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக பல தகிடுதத்த வேலைகளைச் செய்த பலர் இன்று பேச்சு வார்த்தைக் குழுவில் உள்ளதாகவும் சிலர் குறிப்பிடுகிறார்கள்.
உண்மையிலே மக்கள் தியேட்டர்களுக்கு வர வேண்டும் என்று அவர்கள் நினைத்திருந்தால் அந்த கேளிக்கை வரியை மக்கள் பயன்படும் வகையில் அவர்களுக்குக் கொடுத்திருக்க வேண்டும். தாங்கள் பல கோடிகளை வாங்க வேண்டும் மக்கள் சில ரூபாய்களை சேர்த்து கொடுக்க வேண்டும் என்பது என்னவொரு ஆசை என்று திரையுலகத்தைச் சேர்ந்த சிலரே கேட்கிறார்கள். அன்று சில பல லட்சங்களை லஞ்சமாகக் கொடுத்தவர்கள் இன்று ஸ்டிரைக் என்ற பெயரில் போராடுவது முரண்பாடுகளின் மொத்த உருவம் என்கிறார்கள் குறைந்த பட்ஜெட்டில் நல்ல படங்களைக் கொடுப்பவர்கள்.